பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - அன்புடன் மபாஸ்

ஞாயிறு, 11 ஜூலை, 2010

பிரிண்டர் பயன்பாட்டை கண்காணிக்கும் மென்பொருள்

உங்கள் அலுவலகத்தில் அல்லது வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் பிரிண்டரில் cartridge / Toner மாற்றும் பொழுது, 'இவ்வளவு சீக்கிரம் டோனர் தீர்ந்து போக வாய்ப்பே இல்லையே, எப்படி தீர்ந்தது' என்று பலரும் யோசித்திருப்போம். (Cartridge / Toner களின் விலையும் யோசிக்கத் தானே வைக்கிறது. பிரிண்டர் விலை 2000 எனில் அதற்கு கருப்பு மற்றும் கலர் காட்றேஜ்களின் விலை மட்டுமே 1600 ரூ வந்து விடுகிறதே)

இது போன்ற சமயங்களில் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் கேட்கும் பொழுது, நான் பிரின்ட் எதுவும் எடுக்க வில்லை என்ற பதிலே பெரும்பாலும் வரும்.
நமது கணினியில் எந்த டாக்குமெண்ட், எந்த நேரத்தில், நாளில், எந்த பயனாளரால், எவ்வளவு பிரின்ட் எடுக்கப் பட்டது என்பதை தெளிவாக கண்காணித்து ரிப்போர்ட் தரக் கூடிய ஒரு இலவச மென் பொருள்தான் Printer Usage Monitoring Application.


இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கி பயன் பெறுங்கள். இதனை கணினியில் நிறுவும் முறையும் அந்த தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.


சனி, 10 ஜூலை, 2010

சிந்திக்க சில நபிமொழிகள்

1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையாக) ஈமான் கொண்டவராகமாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).


2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121).


3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).


4) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).


5) உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).


6) ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).


7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).


8) மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.


9) இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.


10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.


11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.


12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.


13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.


14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.


15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி


16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.


17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.


18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.


19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.


20) செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.


21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.


22) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.


23) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.


24) தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

iBin - பென் டிரைவ்களுக்கான Recycle Bin

Recycle Bin பற்றி அனைவரும் அறிந்திருப்பர். நாம் Delete செய்யும் கோப்புகளை தற்காலிகமாக இங்கே இருக்கும்.நாம் தவறுதலாக Delete செய்யும் கோப்புகளை இங்கிருந்து எடுத்து விடலாம்.ஆனால் பென் டிரைவ் உபயோகிப்பவர்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்புகளை Delete செய்தால் இங்கே இருக்காது. பின் பென் டிரைவ்ல் இருந்து Delete செய்த கோப்புகளை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென் டிரைவ்களுக்கு Recycle Bin போல செயல்படுகிறது.


முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற கோப்பை உங்கள் பென் டிரைவ்ல் copy செய்து கொள்க.இது வெறும் 216kb அளவு கொண்டதுதான். முதன் முதலில் ஒரு கோப்பை delete செய்யும் போது iBin உங்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்பை delete செய்து விடவா? அல்லது iBin Folderல் தற்காலிகமாக வைத்து கொள்ளவா? என கேட்கும்.


Dump into iBin என்பதை கிளிக் செய்தால் உங்கள் பென் டிரைவ்ல் iBin என்ற Folder ஐ உருவாக்கும். இது தான் உங்கள் பென் டிரைவ்களுக்கான Recycle Bin Folder. இது உங்கள் பென் டிரைவ் இன் அளவிலிருந்து 10% எடுத்து கொள்ளும். வேண்டுமென்றால் நாம் அளவை நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதற்க்கு உங்கள் System Tray ல் உள்ள iBin Icon ஐ கிளிக் செய்க


இதில் Custom Options என்பதை கிளிக் செய்க.இப்பொது கீழ்க்கண்ட Window தோன்றும் .


இதில் சென்று உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம். மேலும் பல வசதிகளும் உள்ளன. எளிதாக நாம் Delete செய்த கோப்புகளை பார்க்கவோ அல்லது நீக்கவோ Dumping Management என்பதை கிளிக் செய்க .கீழ்க்கண்ட Window தோன்றும் .


இதன் மூலம் கோப்புகளை நீக்கவோ அல்லது மீண்டும் சேமிக்கவோ முடியும் .


இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

வியாழன், 8 ஜூலை, 2010

RapidTyping - உங்கள் தட்டச்சு வேகத்தை கூட்ட

தற்போது கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.கணிணியில் நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பும் போதோ,அலுவலக விடயமாக தட்டச்சு செய்யும் போது டைப்ரைட்டிங் தெரியவில்லை என்றால் நாம் தட்டச்சு பலகையில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளையும் பார்த்து பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்.தற்போது நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் தட்டச்சு பழக தனியாக பயிற்சி செல்வது கடினம்.

rapidtyping என்ற எந்த மென்பொருள் நாம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட உதவுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் என்ன மொழியில் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க

பின் உங்கள் தட்டச்சு பலகையின் வகையை தேர்வு செய்து கொள்க

அடுத்த படியாக இந்த மென்பொருள் தரும் பயிற்சிகளை செய்வதின் மூலம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட முடியும்.பயன்படுத்திபாருங்களேன்...

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.

iColorFolder - உங்கள் Folderக்கு அழகாக கலர் கொடுக்க

இது Windows பயன்படுத்துபவர்களுக்காக ஒரு Softபொருள்.உங்கள் கணினியில் பல கோப்புகள் இருக்கும் அவைகள் பல Folderகளில் நீங்கள் வைத்துருப்பீர்கள்.அவைகள் திரைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ,புகைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ அல்லது உங்கள் பர்சனல் கோப்புகள் இருக்கும் Folderஆகவோ இருக்கலாம்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் folder மீது Right Click செய்து Color Label என்பதை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த கலரை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க
இந்த Softபொருளை டவுன்லோட் செய்ய சுட்டி

வெற்று போல்டர்களை நீக்க

நமது கணிணியில் சில நேரங்களில் எந்த கோப்புகளும் இல்லாத வெற்று போல்டர்கள் உருவாகிவிடுவதுண்டு.இவற்றை ஒவ்வொன்றாக தேடி அளிப்பது கடினம்.இதற்கு உதவும் மென்பொருளை பற்றி பார்ப்போம்.
vanityremover என்ற இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை.தரவிறக்கிய பிறகு இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.
படம் 1
உங்களது கணிணியில் வெற்று போல்டர்களை நீக்க வேண்டிய பகுதியை(டிரைவ்) கொடுத்தால் போதும். உதாரணமாக C:\,D:\ .
படம் 2
நீங்கள் கொடுத்த டிரைவில் உள்ள அனைத்து வெற்று போல்டர்களையும் நீக்கி விடும்.இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.

புதன், 7 ஜூலை, 2010

இலகுவாக நகர்படங்களை உருவாக்க ஓர் மென்பொருள்...

நீங்கள் வழங்கும் படத்திற்கு நீரின் உள்ளிருத்தல்,நீரில் நிழல் விழுதல், மழையில் இருத்தல், பனியில் இருத்தல், நீர்சுருளின் உள்இருத்தல் போன்ற விளைவு வெளியீடுகளை நாம் விரும்பிய விதத்தில் விரும்பிய அளவில் தருகின்றது இம்மென்பொருள்.

இம் மென்பொருளை தரவிறக்க...

எப்படி நகரல்களை உருவாக்குவது..?
மென்பொருளை நிறுவியபின் நகரலாக மாற்றவேண்டிய படத்தினை மென்பொருளில் திறக்கவும்.
படம் 1
பின் தெரிவு கருவியை பயன்படுத்தி நாம் கொடுக்கும் விளைவு வரவேண்டிய பகுதியை தெரிவு செய்து(நான் முழு படத்தையும் தெரிவு செய்துள்ளேன்) வலது சொடுக்கு செய்து தெரிவை முடிக்கவும்.

படம் 2
பின் Rain/Snow and Ripples என்ற கருவியை பயன்படுத்தி விளைவு வகையினை தெரிவு செய்யவும்(படம் 4).
படம் 3
படம் 4
பின் நாம் தெரிவுசெய்த விளைவின் அளவு மற்றும் தெரிவுகளை மாற்ற அவ்விளைவிற்கான அமைப்பினை தெரிவுசெய்து விரும்பியவாறு மாற்றங்களை மேற்கொள்ளலாம்.அமைப்பில் ஊடுருவு அளவு(Transparency) என்பதில் ஊடுருவல் அளவை 90 மேல் கொடுக்கவும். இல்லாவிடில் நீர் விளையு சரியாக தெரியாது.
படம் 5
நாம் கொடுத்த விளைவுகளின் முன்னோட்டத்தை பார்க்க Run Animation(படம் 6) என்பதை சொடுக்கி விளைவின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.
படம் 6
முன்னோட்டம் சரியெனில் .SWF, .GIF,.AVI போன்ற உங்களுக்கு தேவையான வகையில் சேமித்துக்கொள்ளலாம்.
படம் 7

திங்கள், 5 ஜூலை, 2010

கோப்புகளை கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க விடாமல் தடுக்க

நாம் அவரவர் கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நாம் கணிணியை விட்டு அகன்றிருக்கும் போது யாராவது அதை தெரியாமல் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.



இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.



இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.



தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.



இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.



உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.



தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க

சனி, 3 ஜூலை, 2010

கூகுளில் தமிழில் தேட இலகுவான வழி.

இணைய அரசனான கூகுள் பல மொழிகளில் தேடுவதற்கு வழியமைத்து தந்துள்ளது. ஆனால் அதன் பயனை பலர் பெருவதில்லை. அதை இயக்கத் தெரியாமையே காரணம்.

இதோ இங்கே எப்படி என்று பார்ப்போம்

http://www.google.lk/அல்லது http://www.google.in/ இதில் எதாவது ஒன்றில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள் பின்னர் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யுங்கள் உதாரணமாக தகவல் தொழில் நுட்பம் என்று தேடுவதற்கு. ( thakaval thozhilnutam ) என்று Type செய்யவும். Thanglish முறையிலே டைப் செய்யவும். முடிவுகள் இவ்வாறு கிடைக்கும்



நீங்கள் விரும்பியதை தேர்வு செய்து பயன் பெறலாம்.

வியாழன், 1 ஜூலை, 2010

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்

கணினி துறையில் எந்த மொழி படிக்க வேண்டும் என்றாலும்கடையில் சென்று புத்தகம் தேடவேண்டாம் அதே போல்பல இணையதளங்ககிற்கு சென்றும் தேட வேண்டாம். இந்தஇணையதளத்திற்க்கு சென்று நாம் அனைத்து வகையானபுத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.ebookpdf.net
இந்த தளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியது போல்அங்கு இருக்கும் தேடுபொறியில் நமக்கு கணினியில் பிடித்தபுத்தகத்தின் பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சிலநிமிடங்களில் நாம் தேடிய புத்தகத்தை எளிதாக காட்டும்உடனடியாக தரவிரக்கிக்கொள்லலாம். ஒவ்வொரு துறைவாரியாகபல தரப்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளது. சில தினங்களுக்குமுன் வரை வெளியான அனைத்து புத்தகங்களையும் நாம்கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.

புதன், 30 ஜூன், 2010

கூகிளில் படத்தை (Image) எவ்வாறு விரும்பிய நிறத்தில் தேடுவது

இன்றைய இணைய உலகில் எங்களின் உற்ற நண்பனாகிவிட்ட கூகிள் தேடும் பொறியில் (Google search engine), எமக்கு தேவையான படத்தை (Image) எவ்வாறு நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன். இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் சிலருக்காவது என் பதிவு உதவும் என நினைக்கிறேன். நீங்கள் அழகிய மஞ்சள் நிற ரோஜா பூவைத் (Yellow colour Rose) தேட வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்... அதாவது கூகிள் பட தேடலின் (URL- Address Bar)இல் கடைசியில் &imgcolor=yellow என்று சேர்த்தால் போதும். அதாவது http://images.google.com/images?q=rose&imgcolor=yellow

படத்தை பாருங்க.....

Autorun . inf வைரஸ்கள் கணணியில் வராமல் தடுக்க " PANDA USB VACCINE "

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டிவைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.

பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.

அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள். நன்றி.


தரைவிறக்க கீழே சொடுக்கவும் .....

http://www.pandasecurity.com/homeusers/downloads/usbvaccine/


இதனை விட smart-virus-remover என்ற software ம் Pendrive , Memory ships (mobile , Digital Camera), களில் இருக்கின்ற autorun.inf களை Delete செய்து மேலும் virus மற்ற ஹர்ட் டிஸ்க் களிற்கு பரவ விடாமல் தடுக்கின்றது ..


தரைவிறக்க கீழே சொடுக்கவும் .....

http://www.technize.com/smart-virus-remover-14/


முயற்சி செய்து பாருங்கள்.. முயற்சி திருவினையாக்கும்.

செவ்வாய், 29 ஜூன், 2010

மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி கணனியை மீள் நிறுவுவது எப்படி?

கணனியில் மீள்நிறுவல் புள்ளி என்றால் என்ன? அதனை எவ்வாறு உருவாக்குவது? கணனியை எப்படி மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி மீள் நிறுவுவது? என்பவற்றை பார்ப்போம்.
முதலில் மீள் நிறுவல் புள்ளி என்பது எமது கணனியை தற்போது நாம் மீள்நிறுவு புள்ளி உருவாக்கும் போது கணனி எவ்வாறு உள்ளதோ அதே நிலைக்கு பின்னொரு நாளில் கணனியை கொண்டு வருவதற்கு உதவும் ஒரு செயற்பாட்டு புள்ளியாகும் . உதாரணமாக நாம் எமது கணனியில் புதிய முயற்சிகளை, தெரியாத சில புதிய மென்பொருட்களை நிறுவுதல், வைரசு தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது கணனியை பழைய நிலைக்கு மீட்டெடுக்க இந்த மீள் நிறுவல் புள்ளிகள் உதவுகின்றன.
இனி மீள்நிறுவல் புள்ளியை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.உங்கள் கணனியில் My Computer ல் வலது சொடுக்கி தோன்றும் சாளரத்தில் Properties ற்கு செல்லவும்.

அங்கே System protection என்பதை சொடுக்கவும்.

படம் 2

தோன்றும் சாளரத்தில் Protection Setting எனும் பகுதியில் உங்கள் கணனியில் இயங்குதளம் நிறுவி உள்ள கணனி வன்தட்டு பிரிப்பை தெரிவு செய்யவும்(வழமையாக C:\ என்ற வன்தட்டு பிரிப்பில் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் ) தெரிவு செய்த பின் Create பொத்தானை சுட்டி தோன்றும் சாளரத்தில் எமது மீள்நிறுவல் புள்ளிக்காக ஒரு பெயரை வழங்கி Create பொத்தானை சொடுக்கவும். (நான் kanittamil என்று கொடுத்துள்ளேன்)

படம் 3

படம் 4

சிறிது நேரத்தின் பின் மீள் நிறுவற்புள்ளி உருவாக்க செயற்பாடு முடிந்து, முடிந்ததற்கான செய்தி திரையில் தோன்றும். இப்போது உங்கள் மீள் நிறுவல் புள்ளி வெற்றிகரமாக நிறுவி முடிந்தது.

படம் 5

இனி இம் மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி எவ்வாறு கணனியை மீள் நிறுவுவது என்று பார்ப்போம்.

முன்னர் செய்தது போலவே My Computer ஐ வலது சொடுக்கி Properties ற்கு செல்லவும்

படம் 1

அங்கே System protection என்பதை சொடுக்கவும். படம் 2

தோன்றும் சாளரத்தில் படம் 3 System Restore என்பதை சொடுக்கி தோன்று சாளரத்தில் Choose a different restore point என்பதை தெரிவு செய்து Next கொடுக்கவும்.

படம் 6

பின் தோன்றும் திரையில் நாம் உருவாக்கி வைத்துள்ள மீள் நிறுவல் புள்ளிகளில் ஒன்றை தெரிவு செயது Next கொடுத்து Finish கொடுக்கவும்.

படம் 7

இப்பொழுது உங்கள் கணனி , கணனியை மீள ஆரம்பிக்க கேட்கும். அனுமதி வழங்கினால் கணனி மீள ஆரம்பித்து நாம் வழங்கிய மீள் நிறுவுபுள்ளியில் கணனி எவ்வாறு இருந்ததோ அதே நிலைமைக்கு கணனியை மீட்டெடுத்து தரும்.

கணனியில் அழிந்த கோப்புக்களை மீளப் பெற ஓர் மென்பொருள்.

எமது கணனியில் இருந்து சில வேளைகளில் சில கோப்புகள் அழிந்து போய்விடும் அல்லது தவறுதலாக அழித்து விடுவோம், இன்னும் சில வேளைகளில் கணனி இயங்க முடியாமல் போய் கணனியை முற்றாக அழித்து இயங்குதளத்தை மீள் நிறுவி இருப்போம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு தேவையான படங்கள், கோப்புகள் போன்றவற்றை மீளப்பெறுவதற்கு பல மென்பொருட்கள் உள்ளது.அவ்வாறான ஒரு மென்பொருள் தான் இந்த கோப்புமீட்டல் மென்பொருள்.மென்பொருளை தரவிறக்க மென்பொருளை பதிவு செய்வதற்கான பயனர் பெயர், தொடரிலக்கம் என்பன மென்பொருளோடு சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.

மென்பொருளை இயக்கி தோன்றும் சாளரத்தில் Fast Format Recover/Complete Format Recover ஐ தெரிவு செய்து Next கொடுக்கவும்.

பின் மீளப்பெறவேண்டிய கோப்பு இருந்த கணனியின் வன்தட்டின் பகுதியை அல்லது USB உபகரணத்தை தெரிவு செய்து Next கொடுக்கவும். இவ்வளவு காலமும் சேமிக்கப்பட்ட கோப்புக்களின் எண்ணிக்கையை பொறுத்தும் மீளப்பெறுவதற்காக நாம் தெரிவு செய்த கோப்பு வகைகளைப் பொறுத்தும் மீளக்கண்டு பிடிப்பதற்கான நேரம் அமையலாம். கண்டு பிடிக்கப்பட்ட கோப்புக்களில் தேவையானவற்றை தெரிவுசெய்து கணனி வன்தட்டின் வேறு ஒரு பகுதியில் சேமிக்கலாம்

ஞாயிறு, 27 ஜூன், 2010

பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்

பால் சேர்க்காத "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான 19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.

தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்துவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நபி(ஸல்) அவர்கள் உணவு சாப்பிட்டால், மூன்று தடவை தன் கை விரல்களை சூப்புவார்கள். ''உங்களின் உணவில் ஒரு சிறு பகுதி கீழே விழுந்து விட்டால்கூட, அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி, அதை சாப்பிடட்டும், ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். மேலும் உணவுத்தட்டு வழித்து உண்ணப்பட வேண்டும் என்றுக் கட்டளையிட்டார்கள். உங்கள் உணவில் எதில் ''பரக்கத்'' உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 608)

சனி, 26 ஜூன், 2010

MS-OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை MS-OFFICE 2003-ல் திறப்பது எப்படி?

OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை OFFICE 2003-ல் திறக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் FILEFORMATCONVERTER என்னும் மென்பொருளின் உதவி கொண்டு திறக்க முடியும்.

FILEFORMAT CONVERTER மென்பொருளை பெற இங்கு சொடுக்கவும்.




இந்த மென்பொருளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்தால் போதும். நீங்கள் MS-OFFICE 2007-ல் உருவாக்கிய பைலை MS-OFFICE-2003-ல் திறக்க முடியும்

புதன், 23 ஜூன், 2010

கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி

பல இணையவழியிலான ஆங்கிலம்-தமிழ் ,தமிழ்-ஆங்கிலம் அகராதிகள் இருக்கின்ற போதிலும் மிகவும் பரந்துபட்ட பிரபல்யமான இணையவழியிலான ஒரு கட்டற்ற அகராதி களஞ்சியமாக திகழ்வது தமிழ் விக்சனரி (Tamil Wiktionary) ஆகும். இதில் பல்வேறுபட்ட அறிய சொற்கள் காணப்படுவது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.


அத்தகைய இணைய உலகிற்கு வலுவாக அமையும் விதத்தில் பல்வேறுபட்ட அதிரடி அறிவிப்புக்களை செய்துவரும் கூகிள்(Google) ஆனது ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் என்னும் இணைய அகராதியினை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது. கூகிள் இணைய அகராதியானது தமிழ் விக்சனரியின் தகுதிக்கு இல்லாத போதிலும் கிட்டதட்ட அதன் தகுதியை அண்மித்த ஒன்றாக காணப்படுகின்றது.


அத்துடன் கூகிளானது மிகவும் இலகுவான மேலும் பல்வேறுபட்ட விடயங்களுடன் புதிய இடைமுகத்துடன் (Interface) வெளிவரவிருப்பது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.

கூகிள் ஆங்கிலம்-தமிழ் இணைய அகராதி சுட்டி

படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்

நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம். RIOT (Radical Image Optimization Tool) எனப்படும் இந்த மென்பொருளானது 1MB க்கும் குறைவான அளவில் கிடைப்பதால் மிக இலகுவாக தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப சுருக்கும் படங்களின் அளவுகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம். படங்களின் அளவுகளை சுருக்குவதற்கான திறன்வாய்ந்த பயனுள்ள மென்பொருள்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: RIOT

திங்கள், 21 ஜூன், 2010

பென் ட்ரைவை ராம் ஆக மாற்றலாம்

நம்முடைய கணணியில் எவ்வளவு நினைவகம் இருந்தாலும் நமக்கு இப்பொழுது வருகிற அப்ளிகேசன்களை இயக்க போதாது. இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் பென் ட்ரைவையே நினைவகமாக மாறினால் எப்படி இருக்கும் அது எப்படி அதை நீங்கள் உங்கள் யுஎஸ்பி போர்ட்டில் செருகி விட்டு இந்த அப்ளிகேசனை இயக்கினால் போதும்.

இதனுடைய சிறப்பம்சங்கள் :


1. யுஎஸ்பி மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்பேசியின் மெமரி கார்டையும் உங்களுடைய மெமரி ஆக பயன்படுத்தலாம்.


2. உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டம் 32பிட் ஆக இருந்தால் 4ஜிபி வரையும் என்டிஎப்எஸ் ஆக இருந்தால் எவ்வளவு மெமரி வேண்டும் ஆனாலும் உபயோகப்படுத்த இயலும்.


3. இது டெஸ்க்டாப் மற்றும் லாப்டாபிலும் செயல்படும்.



அந்த மென்பொருளுக்கான சுட்டி

அன்புடன்

மபாஸ்.


வெள்ளி, 18 ஜூன், 2010

பாஸ்வேர்ட் மறந்து போனால்..



விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்இதனைப் பற்றி ஏற்கனவே ஐடி வலம் பகுதியிலும் சொல்லியிருக்கிறேன். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே. முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும். அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

அன்புடன்
மபாஸ்.

திங்கள், 14 ஜூன், 2010

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.

எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.

பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.

இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது

எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது

அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
படங்கள் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்.
அன்புடன்
மபாஸ்

அழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது?

முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.

இத்தகைய கோப்புக்களை (Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும்தான் உருவாக்கமுடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்கமுடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்றுதான் அழிக்கமுடியும்.
இதோ அதற்கான வழிமுறைகள்
1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள்.(Open DOS Command prompt)(Start>Run>(type) 'cmd' )






2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)





3. தற்பொழுது aux என்ற கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தெரிவுசெய்த இடத்தில் (directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.






4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).




5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.)lpt1 (உதாரணம்: md\lpt1\),CON,lpt5,ஆகஸ்
6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.

எங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
அன்புடன்
மபாஸ்