பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - அன்புடன் மபாஸ்

வியாழன், 8 ஜூலை, 2010

RapidTyping - உங்கள் தட்டச்சு வேகத்தை கூட்ட

தற்போது கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.கணிணியில் நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பும் போதோ,அலுவலக விடயமாக தட்டச்சு செய்யும் போது டைப்ரைட்டிங் தெரியவில்லை என்றால் நாம் தட்டச்சு பலகையில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளையும் பார்த்து பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்.தற்போது நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் தட்டச்சு பழக தனியாக பயிற்சி செல்வது கடினம்.

rapidtyping என்ற எந்த மென்பொருள் நாம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட உதவுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் என்ன மொழியில் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க

பின் உங்கள் தட்டச்சு பலகையின் வகையை தேர்வு செய்து கொள்க

அடுத்த படியாக இந்த மென்பொருள் தரும் பயிற்சிகளை செய்வதின் மூலம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட முடியும்.பயன்படுத்திபாருங்களேன்...

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.

iColorFolder - உங்கள் Folderக்கு அழகாக கலர் கொடுக்க

இது Windows பயன்படுத்துபவர்களுக்காக ஒரு Softபொருள்.உங்கள் கணினியில் பல கோப்புகள் இருக்கும் அவைகள் பல Folderகளில் நீங்கள் வைத்துருப்பீர்கள்.அவைகள் திரைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ,புகைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ அல்லது உங்கள் பர்சனல் கோப்புகள் இருக்கும் Folderஆகவோ இருக்கலாம்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் folder மீது Right Click செய்து Color Label என்பதை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த கலரை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க
இந்த Softபொருளை டவுன்லோட் செய்ய சுட்டி

வெற்று போல்டர்களை நீக்க

நமது கணிணியில் சில நேரங்களில் எந்த கோப்புகளும் இல்லாத வெற்று போல்டர்கள் உருவாகிவிடுவதுண்டு.இவற்றை ஒவ்வொன்றாக தேடி அளிப்பது கடினம்.இதற்கு உதவும் மென்பொருளை பற்றி பார்ப்போம்.
vanityremover என்ற இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை.தரவிறக்கிய பிறகு இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.
படம் 1
உங்களது கணிணியில் வெற்று போல்டர்களை நீக்க வேண்டிய பகுதியை(டிரைவ்) கொடுத்தால் போதும். உதாரணமாக C:\,D:\ .
படம் 2
நீங்கள் கொடுத்த டிரைவில் உள்ள அனைத்து வெற்று போல்டர்களையும் நீக்கி விடும்.இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.