பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - அன்புடன் மபாஸ்

செவ்வாய், 29 ஜூன், 2010

மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி கணனியை மீள் நிறுவுவது எப்படி?

கணனியில் மீள்நிறுவல் புள்ளி என்றால் என்ன? அதனை எவ்வாறு உருவாக்குவது? கணனியை எப்படி மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி மீள் நிறுவுவது? என்பவற்றை பார்ப்போம்.
முதலில் மீள் நிறுவல் புள்ளி என்பது எமது கணனியை தற்போது நாம் மீள்நிறுவு புள்ளி உருவாக்கும் போது கணனி எவ்வாறு உள்ளதோ அதே நிலைக்கு பின்னொரு நாளில் கணனியை கொண்டு வருவதற்கு உதவும் ஒரு செயற்பாட்டு புள்ளியாகும் . உதாரணமாக நாம் எமது கணனியில் புதிய முயற்சிகளை, தெரியாத சில புதிய மென்பொருட்களை நிறுவுதல், வைரசு தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது கணனியை பழைய நிலைக்கு மீட்டெடுக்க இந்த மீள் நிறுவல் புள்ளிகள் உதவுகின்றன.
இனி மீள்நிறுவல் புள்ளியை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.உங்கள் கணனியில் My Computer ல் வலது சொடுக்கி தோன்றும் சாளரத்தில் Properties ற்கு செல்லவும்.

அங்கே System protection என்பதை சொடுக்கவும்.

படம் 2

தோன்றும் சாளரத்தில் Protection Setting எனும் பகுதியில் உங்கள் கணனியில் இயங்குதளம் நிறுவி உள்ள கணனி வன்தட்டு பிரிப்பை தெரிவு செய்யவும்(வழமையாக C:\ என்ற வன்தட்டு பிரிப்பில் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் ) தெரிவு செய்த பின் Create பொத்தானை சுட்டி தோன்றும் சாளரத்தில் எமது மீள்நிறுவல் புள்ளிக்காக ஒரு பெயரை வழங்கி Create பொத்தானை சொடுக்கவும். (நான் kanittamil என்று கொடுத்துள்ளேன்)

படம் 3

படம் 4

சிறிது நேரத்தின் பின் மீள் நிறுவற்புள்ளி உருவாக்க செயற்பாடு முடிந்து, முடிந்ததற்கான செய்தி திரையில் தோன்றும். இப்போது உங்கள் மீள் நிறுவல் புள்ளி வெற்றிகரமாக நிறுவி முடிந்தது.

படம் 5

இனி இம் மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி எவ்வாறு கணனியை மீள் நிறுவுவது என்று பார்ப்போம்.

முன்னர் செய்தது போலவே My Computer ஐ வலது சொடுக்கி Properties ற்கு செல்லவும்

படம் 1

அங்கே System protection என்பதை சொடுக்கவும். படம் 2

தோன்றும் சாளரத்தில் படம் 3 System Restore என்பதை சொடுக்கி தோன்று சாளரத்தில் Choose a different restore point என்பதை தெரிவு செய்து Next கொடுக்கவும்.

படம் 6

பின் தோன்றும் திரையில் நாம் உருவாக்கி வைத்துள்ள மீள் நிறுவல் புள்ளிகளில் ஒன்றை தெரிவு செயது Next கொடுத்து Finish கொடுக்கவும்.

படம் 7

இப்பொழுது உங்கள் கணனி , கணனியை மீள ஆரம்பிக்க கேட்கும். அனுமதி வழங்கினால் கணனி மீள ஆரம்பித்து நாம் வழங்கிய மீள் நிறுவுபுள்ளியில் கணனி எவ்வாறு இருந்ததோ அதே நிலைமைக்கு கணனியை மீட்டெடுத்து தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக